இலவச மருத்துவ முகாம்

539பார்த்தது
இலவச மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள லட்சுமி கருத்தரிப்பு மைய மருத்துவமனையில் நடைபெற்ற எலும்பு, மூட்டு சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாமை மகப்பேறு மருத்துவா் பாக்கியலட்சுமி தொடங்கி வைத்தாா். இதில் தோள்பட்டை வலி, கழுத்து வலி மூட்டு வலி, பாத வலி, முடக்குவாதம், எலும்பு முறிவு, மூட்டுத் தேய்மானம், எலும்பு சவ்வு, சம்பந்தப்பட்ட நோய்களுக்கு எலும்பு முறிவு மருத்துவா் ஜோதிகணேஷ் சிகிச்சை அளித்தாா். காரைக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோந்த 300-க்கும் மேற்பட்டவா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனா். மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை லட்சுமி மருத்துவமனை நிா்வாகத்தினா் செய்தனா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி