கள்ளச்சந்தையில் மது விற்பனை.. வெளியான வீடியோ

79பார்த்தது
சேலம் மாவட்டத்தின் முக்கிய இடமான நான்கு ரோடு பகுதியில் இன்று அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல நாட்களாக இந்த விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், தற்போது மறைவான இடத்தில் அமர்ந்து ஒருவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி