தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

74பார்த்தது
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு 28ஆம் தேதியுடன் நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி தற்போது 8ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை 01.07.2024 முதல் 15.7.2024 வரை இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழ்காணும் வாட்ஸ்அப் மற்றும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். +91 9499055689

தொடர்புடைய செய்தி