இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

81பார்த்தது
இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில், "முழுமையான ஆதிக்கத்துடன், நம் இந்திய அணி வீரர்கள் 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளதைக் கொண்டாடுவதில் உற்சாகமடைகிறேன். சவாலான சூழல்களிலும் இணையற்ற அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திய நமது இந்திய அணி, தோல்வியே காணாமல் உலகக் கோப்பைத் தொடரை நிறைவுசெய்துள்ளது. இந்தியாவுக்குப் பாராட்டுகள்!" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி