பெரிய வெங்காயம் விலை உயர்வு

75பார்த்தது
பெரிய வெங்காயம் விலை உயர்வு
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.45 வரை விற்பனையானது. தற்போது வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. அதாவது, நேற்று உழவர் சந்தைகளில் தரத்திற்கு ஏற்ப பெரிய வெங்காயம் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.60 வரை விற்பனையானது.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. அறுவடை காலங்களில் 300 முதல் 400 டன் வரை பெரிய வெங்காயம் கொண்டு வரப்படும். தற்போது அங்கு அறுவடை குறைந்துள்ளதால் அதன் வரத்து குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 100 முதல் 200 டன் வரை தான் வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி