விஜய் கட்சி தொடங்கியது யாருக்கு பயமோ இல்லையோ சீமான் பயத்தில் அரண்டு போயுள்ளார் என அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறியுள்ளார். 13 ஆண்டுகளாக சீமானை நம்பி ஏமாந்து போயுள்ளோம் என தொடர்ச்சியாக நாதக நிர்வாகிகள் வெளியே வருகின்றனர். எனவே முதலில் கூடாரம் தான் என அவர் கூறியுள்ளார். மேலும், பெரும்பாலான நாதக வாக்கு வாங்கி தவெக-வில் இணைய வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.