கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், இதில் மேலும் 13மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், தமிழகத்தில் வாக்களித்த மக்களை மனதில் வைத்து, இனியாவது சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.