நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களின் திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2-ம் தேதி) தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று சரத்குமார் குடும்பத்தினர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வரலட்சுமி திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது சரத்குமாருடன் அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் இருந்தனர்.