விஷமாக மாறும் உப்பு.. அதிர்ச்சி தகவல்!

75பார்த்தது
மனித உடலில் சோடியம் என்பது பிளாஸ்மா வால்யூமை பராமரிப்பதற்கும், உடலில் உள்ள செல்கள் சாதாரணமாக செயல்படவும் தேவை. ஆனால், அது கூடுதலாக தேவை இல்லை என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியுள்ளார். இந்தியா மாதிரியான நாடுகளில் 5 கிராம் உப்பிற்கு பதிலாக 10 கிராம் உப்பினை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த கூடுதல் உப்பானது மனிதனுக்கு உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உப்பின் அளவை குறைத்தால் மட்டுமே உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும். மேலும் வீட்டில் சமைக்கும் உணவுகளை விட வெளியே வாங்கி சாப்பிடும் உணவுகளில் உப்பு அதிகம் உள்ளதால் அதனை குறைத்துக்கொள்வது நல்லது என கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி