அத்திப் பழத்தில் இருக்கும் ஏராளமான நன்மைகள்..!

81பார்த்தது
அத்திப் பழத்தில் இருக்கும் ஏராளமான நன்மைகள்..!
ட்ரைகிளிசிரைடுகள் என்பது ரத்தத்தில் இருக்கும் கொழுப்புத் துகள்களாகும். அத்திப்பழம் ரத்தத்தில் இருக்கும் ட்ரைகிளிசிரைடுகள் அளவை குறைக்கிறது. எனவே இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் பெக்டின் என்கிற கரையக்கூடிய நார்ச்சத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உலர் அத்திப்பழங்களில் ஒமேகா-3, ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்களும், பைட்டோஸ்டெடரால் ஆகியவையும் இருப்பதால் உடலில் தேங்கிய கொழுப்புகள் குறைகின்றன. கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் இருப்பதால் பாலியல் ஹார்மோன்களை மேம்படுத்தி, மலட்டுத் தன்மையை குறைக்க அத்திப்பழம் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி