ஏற்காட்டில் தோட்டக்கலை மாணவர்களுக்கு காபி சாகுபடி பயிற்சி

53பார்த்தது
ஏற்காட்டில் தோட்டக்கலை மாணவர்களுக்கு காபி சாகுபடி பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆர். வி. எஸ். பத்மாவதி அம்மாள் தோட்டக்கலை கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகள் காபி சாகுபடி குறித்த பயிற்சிக்காக ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் வந்துள்ளனர். மாணவர்களுக்கான காபி சாகுபடி குறித்து 7 நாட்களாக நடந்து வரும் பயிற்சியை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மாலதி தொடங்கி வைத்தார். பயிற்சியில் காபி சாகுபடியின்போது மேலாண்மை முறைகள், அறுவடைக்கு பின் சார்தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சியாகவும், செயல்விளக்கமாகவும் செய்து காண்பிக்கப்பட்டன. ஏற்காடு காபி வாரியத்தை கண்டுகளித்த மாணவர்கள், காபி வாரிய செயல்பாடுகள், முக்கிய காபி ரகங்கள் குறித்தும் முதன்மை தொடர்பு அதிகாரி ஸ்ரீதரன் விளக்கினார். காபியில் அறுவடை பின்செய்முறைகள் குறித்தும், காபி விதை உற்பத்தி முறைகள் குறித்தும் சித்ராகலா செயல் விளக்கம் செய்து காண்பித்தார். 7 நாட்கள் நடந்த இந்த பயிற்சியில் காபி சாகுபடி, மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த பயிற்சி அமைந்தது என்று மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி