சங்ககிரி காலபைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை

63பார்த்தது
சங்ககிரி காலபைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள சோழீஸ்வரர் கோயில் உள்ள காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறைஅஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சோழீஸ்வரர் கோயிலில் உள்ள காலபைவரருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது இதே போல் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அன்னதானப்பட்டி பூத்தாலகுட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயிலில் உள்ள காலபவைருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இரு கோயில்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி