சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

52பார்த்தது
சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் மரவனேரி 6-வது கிராஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த மணக்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்தியசிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி