மாநில கிக்பாக்சிங் போட்டியில் சேலம் வீரர், வீராங்கனைகள் சாதனை

76பார்த்தது
மாநில கிக்பாக்சிங் போட்டியில் சேலம் வீரர், வீராங்கனைகள் சாதனை
சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில கிக்பாக்சிங் போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட அணி சார்பில் அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கத்தை சேர்ந்த 28 பேர் கலந்து கொண்டனர். இதில் 8 தங்கம், 9 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்று வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்தனர்.
தங்கப்பதக்கம் வென்ற சூர்யா, ஹரவிருத்தி, லக்சனா மற்றும் ஆத்தூரை சேர்ந்த ராஜா ஆகியோர் வருகிற 21-ந் தேதி புனேவில் நடைபெறும் தேசிய கேடட் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதேபோல் ஜூனியர் பிரிவில் ஹிதேஸ், மதுமித்ரன், மணிகண்டன், கவிபாலன் ஆகியோர் மேற்கு வங்காளத்தில் நடக்கும் தேசிய ஜூனியர் போட்டியிலும், சீனியர் பிரிவில் பிரசன் கோவாவில் நடக்கும் தேசிய போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் சேலம் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் சங்க மாவட்ட செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ்பாபுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தேசிய நடுவர்கள் கணேசன், சிவானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி