சேலம் மாவட்ட காதுகேளாதவர் பொது நல முன்னேற்ற சங்கத்தின் 10-ஆண்டு விழா நேற்று ஜாகீர்அம்மாபாளையத்தில் நடந்தது. சங்க சேலம் மாவட்ட தலைவர் அருண்குமார் வரவேற்றார். தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபு, சங்க விளையாட்டு கவுன்சில் தலைவர் பாலாஜி, பொது செயலாளர் செல்வகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். அருள் எம். எல். ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் காதுகேளாதவர்களுக்கு காப்பீடு வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாத உதவித்தொகை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும். ரெயிலில் பயணம் செய்ய சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர். இதில் சங்க பொதுச்செயலாளர் பயாஸ்கான், துணை செயலாளர் பாக்கியா, பொருளாளர் சிண்டு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.