சேலத்தில் எஸ். டி. பி. ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
சேலத்தில் எஸ். டி. பி. ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்தர பிரதேச மாநிலம் சம்பாலில் 5 முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலம் கோட்டை பகுதியில் நேற்று (நவம்பர் 28) மாலை எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷரிப் பாஷா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள், பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் உத்தரபிரதேச மாநில சம்பாலில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சுட்டு படுகொலை செய்ததாக அம்மாநில போலீசாருக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும் கோஷங்களை எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி