உலக மனநல நாளையொட்டி சோனா பொறியியல் கல்லூரியில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சேலம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் தாரை ராஜகணபதி தலைமை தாங்கினார். சரவணா மருத்துவமனை டாக்டர் அசோக் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு பேச்சாளராக மனநல டாக்டர் பாபு கலந்து கொண்டு மனநலம் குறித்து விரிவாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள், மாணவ- மாணவிகள் உள்பட 1, 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.