சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழு சார்பில் கோட்டை பகுதியில் நேற்று (நவம்பர் 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் பிரவீன்குமார் (வடக்கு), கணேசன் (மேற்கு), பச்சமுத்து (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதானி நிறுவனத்தின் மீது புலனாய்வு விசாரணை நடத்த கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி