தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதனடிப்படையில் நேற்று (அக்., 28) புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை திறந்து எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.48 லட்சத்து 68 ஆயிரத்து 414 ரொக்கமாகவும், 171 கிராம் தங்கமும், 2 கிலோ 510 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.