சேலத்தில் நேற்று(அக்.10) பல்வேறு இடங்களில் கனமழை பெய்து பெய்தது. கனமழை காரணத்தினால் சிவதாபுரம்- கந்தம்பட்டியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் ரெயில்வே பாலத்தில் மழைநீர் முழுவதும் நிரம்பி விட்டது. இதையடுத்து அருள் எம். எல். ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததை கண்டு உடனே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். சம்பவ இடத்துக்கு அதிகாரிகளை வரவழைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். அதன்படி ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதேபோல் முல்லைநகர், திருவாகவுண்டனூர், காமராஜர் காலனி, புதுரோடு, சேலத்தாம்பட்டி, அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதிக்கும் நேரில் சென்ற அருள் எம். எல். ஏ, மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடியிருப்புகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற உடனே நடவடிக்கை எடுத்த அருள் எம். எல். ஏ. வை அந்த பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.