சேலம்: வார இறுதி நாட்கள்.. 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

67பார்த்தது
சேலம்: வார இறுதி நாட்கள்.. 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை முக்கிய நகரங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இதுதவிர, பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் (www.tnstc.in) மற்றும் App வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், நாளை (சனிக்கிழமை) அமாவாசையை முன்னிட்டு சேலம் நகர பஸ் நிலையத்தில் இருந்து சித்தர் கோவிலுக்கும், சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் மற்றும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி