பேக்கரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

79பார்த்தது
பேக்கரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
சேலம் கந்தம்பட்டி பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர் கோரிமேட்டை சேர்ந்த பாலமுருகன் (வயது 31), சம்பவத்தன்று 2 பேர் வந்து டீ மற்றும் தின்பண்டங்கள் வாங்கி தின்று விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். அபே்பாது இருவரும் பாலமுருகனை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரம் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (25), அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி