சேலம் புதிய பஸ் நிலையத்தில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு

64பார்த்தது
சேலம் புதிய பஸ் நிலையத்தில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சேலம் ஜே. சி. ஐ. சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதாவது, ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஓட்டு போடுவது ஜனநாயக உரிமை என்பதை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகளும், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மரக்கன்றுகளும் நடப்பட்டன.
பசுமை தாயக மாநில இணை செயலாளர் சத்ரியசேகர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார். இதில் டாக்டர்கள் கனகராஜ், ராணி, என்ஜினீயர் பிரசாத், ஜே. சி. ஐ. பவித்ரா, தரினிஷ் மற்றும் எலைட் டான்ஸ் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டு வாக்களிப்பது குறித்து பஸ் நிலையம் பகுதியில் இருந்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி