1, 008 மாணவ-மாணவிகள் பரத நடனமாடி உலக சாதனை

50பார்த்தது
1, 008 மாணவ-மாணவிகள் பரத நடனமாடி உலக சாதனை
சேலம் கோரிமேடு, கொண்டலாம்பட்டி பகுதிகளில் செயல் பட்டு வரும் 'ராகாஸ் நாட்டியாலயா' அகாடமி சார்பில் சேலம் அரியானூரில் உள்ள 1, 008 சிவலிங்கம் முன்பு 1, 008 மாணவ- மாணவிகள் 7 நிமிட பாடலுக்கு நிற்காமல் பரத நடனமாடி உலக சாதனை படைத்தனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக இயக்குனர்கள் அண்ணபூரணி சண்முகசுந்தரம், டாக்டர் ஏ. எஸ். கணேசன், அருணாதேவி. சுமதி, டாட்டின் காமாட்சி மற்றும் மேயர் ராமச் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை பாராட்டினர். உலக சாதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராகாஸ் நாட்டியாலயா அகாடமி நிர்வாக இயக்குனர் ஜெயந்தி, நிர்வாகி ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி