சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 555 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. அணைக்கு
நீர்வரத்து நேற்று வினாடிக்கு 544 கன அடியில் இருந்து இன்று 555 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71. 25 அடியில் இருந்து 71. 23 அடியாக சரிந்துள்ளது.
நீர்இருப்பு 33. 76 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.