தெடாவூர்பேரூராட்சி தலைவர்மீதுபெண்கவுன்சி லர் புகார்

71பார்த்தது
சேலம் மாவட்டம், தெடாவூர் பேரூராட்சி உள்ளது. இங்கு, தி. மு. க. ,
நகர செயலராகவும், பேரூராட்சி தலைவராகவும் இருப்பவர் வேலு (48),
கடந்த சில நாட்களுக்கு முன் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தின் போது தி. மு. க. , 4வதுவார்டு கவுன்சிலரான நந்தினி (26) என்பவர் தனது கணவரிடம் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை கேட்டுள்ளார்.
பேரூராட்சித் தலைவர் வேலு மற்றும் கவுன்சிலர் நந்தினி ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைவர் மீது கவுன்சிலர் நந்தினி கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தி. மு. க. , கவுன்சிலர் நந்தினி கூறும்போது ‘நான்கு மாதங்களுக்கு முன், பேரூராட்சி சேர்மன்50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார். கடன் தொகை கேட்டேன்.
அப்போது நீ ஏன் டெண்டர் முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர், மற்றும் உதவி செயற்பொறியாளரிடம், எட்டு கவுன்சிலர்களுடன் சேர்ந்து கொண்டு புகார் கொடுத்தீர்கள். அதனால் பணத்தை தரமுடியாது என்று தகாத வார்த்தையில் திட்டினார்.
வேலு அவரது உறவினர்களை அழைத்து வந்து என்னையும் கணவரையும் தாக்க முற்பட்டனர். பெண் என்று பாராமல், மக்கள் பிரதிநிதியாக உள்ள என்னை பொது இடத்தில் தரக்குறைவாக பேசுகிறார். பேரூராட்சி தலைவர் வேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி