சேலம் மாவட்டத்தில் 234.23 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள் உள்ளிட்ட விதைகள் மற்றும் 20,762 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் உரக்கடைகளில் உரங்கள் விற்கப்படுவதை அலுவலர்கள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்திட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வேளாண்மை மற்றும் அதன் சார்புத் துறைகளின் முன்னோடித் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் இன்று (13.09.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன் வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் குமரன் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.