எடப்பாடி அருகே பாமக கொடிக்கம்பம் சேதம்.. பரபரப்பு

56பார்த்தது
எடப்பாடி அருகே பாமக கொடிக்கம்பம் சேதம்.. பரபரப்பு
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது வடுகப்பட்டி கிராமம், இங்குள்ள மேட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் உள்ள இந்த கொடி கம்பத்தை நேற்று முன்தினம்(அக்.30) நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர். அப்பகுதியில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை பிடுங்கி அருகில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றனர். இந்நிலையில் இன்று(நவ.1) காலை அந்த பகுதிக்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் அங்கு கொடிக்கம்பம் சேதப்படுத்தபட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்தினை பார்வையிட்ட போலீசார் அப்பகுதி உள்ளூர்வாசிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் கொங்கணாபுரம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியில் கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டது குறித்து தகவல் அறிந்த கட்சியினர் அந்த பகுதியில் திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி