சேலத்தில் 3-வது முறையாக பாய்ந்தது குண்டாஸ்

8494பார்த்தது
சேலத்தில் 3-வது முறையாக பாய்ந்தது குண்டாஸ்
சேலம் ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் உதயகுமார் என்ற சின்னதம்பி (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (27). நண்பர்களான இருவரும் ரவுடிகள் ஆவர். கடந்த 13-ந்தேதி அந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் இறந்தார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் சுடுகாட்டிற்கு சென்றனர்.

அப்போது பரசுராமன், சின்னத்தம்பியிடம் மதுவாங்கி கொடுக்குமாறு கேட்டு உள்ளார். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்தம்பி கத்தியால் குத்தி, பரசுராமனை கொலை செய்தார். இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் கொலை செய்து அந்த பகுதியில் பொது அமைதி பாதிக்கும்படி நடந்து கொண்ட சின்னத்தம்பியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் துணை கமிஷனர் பிருந்தா, கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சின்னத்தம்பியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

அதன்பேரில் சேலம் சிறையில் உள்ள சின்னத்தம்பியிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர். அவர் மீது 3-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி