வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்ஏராளமான பக்தர்கள் தரிசனம்

52பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அரசநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கந்தசாமி புதூர் பகுதியில் பழமையான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்துவதாக அப்ப பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர் அதன் அடிப்படையில் கடந்த 25ஆம் தேதி முகூர்த்த கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு கும்பாபிஷேக விழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு யாகங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி