ஆத்தூர்ஏரிதடுப்பணையில்வழிந்தநீர்பூஜைசெய்துவரவேற்ற விவசாயிகள்

81பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னங்குடிபாளையம் ஏரியில் போதிய மழை இல்லாததால் வறண்டு காணப் பட்டதோடு சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதராக காட்சியளித்து வந்தது, இதனிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது, இதனையடுத்து ஆத்தூர் மற்றும் கல்வராயன்மலை தொடர்ச்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஓராண்டுக்கு பிறகு மீண்டும் தென்னங்குடிபாளையம் ஏரி நீர் நிரம்பியது, தடுப்பணையில் வழிந்த தண்ணீரை வரவேற்று விவசாயிகளும், பொதுமக்களும் பூஜை செய்து வழிபட்டனர், மேலும் ஏரியின் தடுப்பணையில் ஆர்பரித்து ஊற்றும் தண்ணீரில் துள்ளி குதிக்கும் மீண்களை கண்டு களித்த பொதுமக்கள் ஏரியின் வாய்க்கால் பகுதியில் இளைஞர்கள் மீன்களை பிடித்தும் உற்சாகமாக குளித்து வருகின்றனர், மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் சீமை கருவேல மரங்களுக்கு நடுவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பறவைகள் பறந்து செல்லும் அழகிய காட்சி பார்ப்பவரை கண் கவர செய்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி