சிப்காட் வளாகத்திற்கு காவேரி நீர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு

69பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூரி்ல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆத்தூர்) ஜெயசங்கரன், (கெங்கவல்லி) நல்லதம்பி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்திருந்தார். திட்டத்தில் 270 கோடி ரூபாய் செலவில் தனி பைப்லைன் மூலம் குடிநீர் குழாய் கொண்டுவரப்பட்டது. இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதி என்பதாலும் உப தொழிலாக கால்நடை வளர்ப்பிலும் அதிக அளவில் உள்ளனர். தமிழக முதல்வர் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உள்ளிட்ட யாரும் இதுவரை கால்நடை பூங்காவிற்கு வரவில்லை ஆனால் உளுந்தூர் பேட்டையில் அமைக்க பட உள்ள தைவான் நாட்டின் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொடுக்க வருகின்றனர். ஏற்காடு ஆத்தூர் கெங்கவல்லி உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி வழியாக தண்ணீர் குழாய் செல்கின்ற நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது கூட பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் தண்ணீரை கேட்கவில்லை. வியாபாரத்திற்காக தண்ணீரை விற்க பார்ப்பதாகவும், திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவது போவதாகவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி