சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர, ஊரக காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளவுதம் கோயல் உத்தரவின் பேரில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவல்துணை கண்காணிப்பாளர் சதீஸ்குமார்
தலைமை வகித்தார்.
ஊரக காவல் ஆய்வாளர் பூர்ணிமா, நகர காவல் ஆய்வாளர் அழகுராணி,
மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள்,
காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தில் காவல்துறையினர் பேசுகையில் அதிகரித்து வரும் திருட்டு, கொலை கொள்ளை சம்பங்களை தடுக்க கிராமங்கள் தோறும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், ஆன்லைன் மோசடி,
குழந்தை திருமண தடுப்பு, பெண் வன்கொடுமை,
மற்றும் போதை ஒழிப்பு குறித்தும், இலவச தொடர்பு எண்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்கள். மேலும் இக்கூட்டத்தில் காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள், சமூக ஆர்வலர்கள்,
தன்னார்வலர்கள்,
ஆட்டோ ஒட்டுனர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.