சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

84பார்த்தது
சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. காலை முதல் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆத்தூர் நகரம், நரசிங்கபுரம், பைத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி