சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதி பகுதியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள தடுப்பணை பகுதிகளில் இருபுற கரைகளில் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஓராண்டிற்கு மேலாக அப்பகுதியில் வறண்ட பகுதியாக காணப்பட்ட நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக வசிஷ்ட நதியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் ஜெயக்குமார் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.