சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இந்த 18 வார்டுகளுக்கும் ஒப்பந்த தூய்மை பணியாளராக 70 பேர் பணியாற்றி வருகின்றனர், நகராட்சியில் ஒப்பந்தத்தின் மூலம் சென்னையைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஹெல்த் கேர் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறது. இந்த நிறுவனம் நரசிங்கபுரம் நகராட்சியில் பணியாற்றும் 70 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே கடந்த , 7 ம் மாதம் ஒப்பந்ததூய்மை பணியாளர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் 308 ரூபாய் வழங்கப்பட்ட சம்பளத்தை 370 ரூபாயாக உயர்த்தி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது, இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்காமல் தற்போது இரண்டு மாத சம்பளத்தையும் வழங்காமல் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை அலைக்கழித்து வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 70 பேரும் பணிக்கு செல்லாமல் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க கோரியும், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட 370 ரூபாயாக வழங்கவேண்டும் என நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.