ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், துலுக்கனூர் ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பத்மினி பிரியதர்சினி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத் தார். ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன், மண்டல துணை தாசில்தார் கங்காதரன், ஊராட்சி தலைவர் மருதமுத்து, நிர்வாகிகள் சின்னசாமி, துரைசாமி, ராமன், கரு ணாகரன், சிவசக்தி, செல்வம், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.