சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள கூட்ரோடு கால்நடை பூங்கா பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்நிலையில் இவ் வளாகத்திற்கு என சேலத்திலிருந்து தனி குழாய்கள் மூலம் காவிரி குடிநீர். விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தண்ணீரை உளுந்தூர்பேட்டையில் அமைய உள்ள சிப்காட் வளாகத்திற்கு குழாய்கள் மூலம் எடுத்துச் செல்ல ஒப்பந்தம் விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆத்தூர்) ஜெயசங்கரன், (கெங்கவல்லி) நல்லதம்பி ஆகியோர்செய்தியாளர்களை சந்தித்தனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்திருந்தார். திட்டத்தில் 270 கோடி ரூபாய் செலவில் தனி பைப்லைன் மூலம் குடிநீர் குழாய் கொண்டுவரப்பட்டது. இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதி. தமிழக முதல்வர் கால்நடைத்துறை அமைச்சர் யாரும் இதுவரை கால்நடை பூங்காவிற்கு வரவில்லை உளுந்தூர்பேட்டையில் அமைக்கபட உள்ள தைவான் நாட்டின் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்கப்படுவதாகவும் இதற்கு வியாபாரத்திற்காக தண்ணீரை விற்க பார்ப்பதாகவும், திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவது போவதாகவும் தெரிவித்தார்.