சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மகன் அபிஷேக் (15) பெத்தநாய்க்கன்பாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவன் பள்ளிக்கு செல்வதற்கு சக்திநகர் அவரது வீட்டிலிருந்து செல்லியம் பாளையத்திற்கு 7 கிலோ மீட்டர் மிதிவண்டியில் தினமும் செல்ல வேண்டும் அதற்கு 45 நிமிடம் ஆகும் இதனால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்லமுடியாமல் காலதாமதாமாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும். இதனால் அபிஷேக் பேட்டரி மூலம் தனது பழயை சைக்கிளை இயக்க வேண்டும் என முடிவு செய்தார்.
மாணவன் கடந்த ஒரு ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு தற்போது 10 ம் வகுப்பில் அவரது முயற்சி வெற்றியடைந்தது, மேலும் அந்த மிதிவண்டியில் , 2800 ஆர். பி. எம். வேக மோட்டார் பொருத்தப்பட்டு அதில் 30 கி மீட்டர் வேக திறன் கொண்ட பேட்டரி மூலம் மிதி வண்டியை 10ம் வகுப்பு மாணவன் இயக்கி சாதனை படைத்துள்ளார். இதில் 30 கி. மீட்டருக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகுவதாகவும் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவன் தனது பெற்றோரின் குடும்ப நிலையை அறிந்து இருசக்கர வாகனம் வாங்காமல் தான் பயன்படுத்திய பழைய சைக்கிளில் பேட்டரி மோட்டார் பயன்படுத்தி சைக்கிள் தயார் செய்து தற்போது பள்ளிக்குச் செல்லும் மாணவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.