தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று அந்தக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரமேலதா, விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் விஜய பிரபாகரன் மட்டும் இல்லாமல் பல்வேறு நபர்களுக்கு செயற்குழு கூட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.