தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அதற்கடுத்த இருதினக்களில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (நவ.11) முதல் 5 நாட்களுக்கு (நவ.15 வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 5 நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.