டிஐஜி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஆய்வு

51பார்த்தது
திருவாடானைகள் டிஐஜி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஆய்வு மேற்கண்டார்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி. ஐ. ஜி முனைவர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு திருவாடானை மக்கள் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவகங்கை மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள நிலையில் சிவகங்கை உள்ள ஐந்து துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 5 கண்காணிப்பு அலுவலகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அலுவலகம் மட்டுமே நிலவையில் உள்ளது. தொடர்ந்து இஐ மூலமாக காவல்துறை இணையதளம் இணைக்க உள்ளது இதன் மூலம் குற்றவாளிகளை பிடிப்பது மிகவும் எளிதாகிவிடும் என்றும் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  வழிப்பறி, கொள்ளை குற்றங்கள் குறைந்திருந்தாலும் குண்டர் சட்டங்கள் அதிகமாக போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். உடன் திருவாடனை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆய்வாளர் ஜெயபாண்டியன் மற்றும் சார் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி