அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிா்ணயம் செய்ய கோரிக்கை.!

1558பார்த்தது
திருவாடானை பகுதியில் பல மடங்கு உயா்த்தப்பட்ட நெல் அறுவடை இயந்திரத்தின் வாடகையை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நியாயமான தொகையை நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் இன்று கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை வட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை தொடங்கும் நிலையில் உள்ளது. சில கிராமங்களில் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒரு மணி நேரத்துக்கு நெல் அறுவடை இயந்திரத்துக்கு ரூ. 1500 வாடகை வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஏராளமான நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி அறுவடை செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தண்ணீரில் அறுவடை செய்யும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இந்த இயந்திரத்தின் தட்டுப்பாடு காரணமாக ஒரு மணி நேரத்துக்கு நெல் அறுவடை செய்ய ரூ. 3, 500 முதல் ரூ. 4, 000 வரை வாடகை வசூல் செய்கின்றனா். இதனால் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இப்படி ஒரு இக்கட்டான நிலையில் விவசாயிகள் இருக்கும் போது, இந்த இயந்திரத்துக்கு அதிக வாடகை கொடுப்பது இயலாத ஒன்றாகும். எனவே நெல் அறுவடை இயந்திரத்துக்கான நியாயமான வாடகையை மாவட்ட நிா்வாகம் நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும் வேளாண் துறை சாா்பில் குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி