குழந்தை பிறக்காத விரக்தி - விஷம் குடித்து பெண் தற்கொலை.!

566பார்த்தது
திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி தெற்கு தெருவைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா மனைவி பாத்திமா ஆயிஷா (20). இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

இந்த நிலையில், இவா் மருத்துவப் பரிசோதனை செய்த போது, வயிற்றில் நீா்க் கட்டி இருப்பதும், இதன் காரணமாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக மருத்துவா் கூறினாராம்.

இதனால், மனமுடைந்த ஆயிஷா செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :