நெல் அறுவடைக்கு அதிக செலவு செய்யும் விவசாயிகள் கவலை.!

74பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை பகுதி உள்ளது. அந்த அளவுக்கு 26 ஆயிரத்து 650 ஹெக்டேர் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
   
  தற்போது கனமழையின் காரணமாக வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் கதிர் அறுவடை செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்ட நிலையில் அதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட அறுவடை மெஷின் வரவழைக்கப்பட்டது.
அதன் மூலம் அறுவடை செய்ய ரூபாய் 3000 முதல் 3500  வசூல் செய்யப்படுகிறது.    
  
    இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு உள்ளாகின்றனர். விவசாயிகளும் வேறு வழியின்றி தாங்கள் உரிய காலத்திற்குள் அறுவடை செய்யாவிட்டால் பயிர்கள் வீணாகிவிடும் என்ற அச்சத்தில் போட்டி போட்டு அறுவடை செய்து வருகின்றனர்.

      சாதாரணமாக அறுவடை செய்யும் இயந்திரத்திற்கு ரூபாய் 1500 முதல் 1600 வரை செலவாகும் என்ற நிலையில் இதில் இரண்டு மடங்கு செலவாகதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

அரசு விவசாய பொறியியல்   அலுவலகம் மூலம் 1800க்கு அறுவடை செய்யப்படுகிறது. ஆனால் அந்த இயந்திரம் எளிதில் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
எனவே  விலை நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி