தொண்டி பேருந்து நிலையம் மது கூடமாக மாறிவிட்டதாக புகார்.!

2915பார்த்தது
தொண்டி பேருந்து நிலையம் மது கூடமாக மாறிவிட்டதாக புகார்.!
தொண்டி மதுரை தேசிய நெடுஞ்சாலை சென்னை தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையின் முக்கியமான பேருந்து நிலையம் தொண்டி பேருந்து நிலையம்.

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொருள்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் தினசரி ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக பயணிகள் அமரும் பகுதிக்குள் மது பிரியர்கள் பகல் மற்றும் இரவுநேரங்களில்அமர்ந்து கொண்டு அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளை கூறி சண்டையிடுகின்றார்கள்.

இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பெண் பயணிகள் முகம் சுளித்து அங்கு நிற்க முடியாமல் வெயில் பகுதியில் காத்திருந்து பயணம் செய்யக்கூடிய சூழல் ஏற்படுகிறது இதனைத் தட்டிக் கேட்கும் ஆண் பயணிகளிடம் மது போதையில் இருக்கும் எங்களை காவல்துறை கைது செய்யாது என்று அவர்களிடத்திலும் வாக்குவாதம் செய்கின்றனர் மேலும் புதிய பேருந்து நிலைய பகுதியை சுற்றி கள்ள மது விற்பனையும் நடைபெறுகிறது.

ஆகவே, இது விஷயத்தில் காவல்துறை கவனம் செலுத்தி ரோந்து பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி