திருப்புல்லாணி கோவிலில் நகைகள் மாயம்: தீவிர விசாரணை.!

66பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமான வழக்கில் ஸ்தானிகர் சீனிவாசனின் அண்ணன் தெய்வச்சிலை ராமசாமியிடம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

தற்போதைய திவான் பழனிவேல் பாண்டியன் புகாரின்படி, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நகை பொறுப்பாளர் கோவில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணிபுரிந்த கோவில் ஊழியர்கள் ராமு, பாண்டி, சாமித்துரையிடமும் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக முன்னாள் திவான் மகேந்திரனிடம் இரு முறை விசாரணை நடத்தினர்.

ஸ்தானிகர் சீனிவாசன் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இரு முறை கேட்ட முன் ஜாமின் மனுக்களையும் நீதிபதி குமரகுரு தள்ளுபடி செய்தார். இதற்கிடையே, சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு செய்துள்ளார்.

வழக்கில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் கோவிலில் 1981 முதல் 30 ஆண்டுகளாக நகைகள் மற்றும் உண்டியல் பிரிவின் நிர்வாக பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரித்தனர். மேலும், தெய்வச்சிலை ராமசாமியை வரவழைத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல மணி நேரம் விசாரித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி