மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென உள்வாங்கிய கடல்.!

3259பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென கடல் 500 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. இதன் காரணமாக கடற்கரை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி உள்ளதாகவும் இதனால் படகுகளை மீட்க முடியாத மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட பெரும் பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் உள்வாங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் புவியியல் அறிஞர்கள் இருந்த தகவலை உறுதி செய்யவில்லை.

அதேபோல் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததால் இதன் காரணமாகவும் கடல் உள்வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் கடல் உள்வாங்கியதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருப்பது மட்டும் உண்மை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி