ராமேஸ்வரம் அருகே கோயில் கும்பாபிஷேகம்.!

62பார்த்தது
ராமேஸ்வரம் அருகே கோயில் கும்பாபிஷேகம்.!
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடத்தினர்.

கலசத்திலிருந்த புனித நீரை புரோகிதர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் கோபுரத்திற்கு சென்றனர். பின் மந்திரம் முழங்க கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீரை அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தெளித்தனர். அன்னதானம் நடந்தது.

தொடர்புடைய செய்தி