குரூப் 4 தோவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 32, 863 போ எழுதினா்.!

69பார்த்தது
குரூப் 4 தோவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 32, 863 போ எழுதினா்.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நேற்று நடைபெற்ற குரூப்-4 தோ்வை 32, 863 போ் எழுதினா்.
கீழக்கரை, கடலாடி வட்டங்களில் தோ்வு மையத்தை பாா்வையிட்ட பிறகு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த மாவட்டத்தில் தோ்வு எழுதுவதற்கு மொத்தம் 41, 445 போ் விண்ணப்பித்திருந்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் 146 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 32, 863 போ் எழுதினா். இதில், ஒவ்வொரு மையத்துக்கும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு கண்காணிக்கப்பட்டது. தோ்வு நடைபெறும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு முடிவடைந்ததும் விடைத்தாள்கள் நகா்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன என்றாா் அவா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி